search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவி மாயம்"

    • ஆந்திராவில் இருந்து சிகிச்சைக்காக வேலூர் வந்தார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்

    வேலூர்:

    ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் ராம் செட்டி. இவரது மகள் நாக சாய் பிரியா (வயது 23). இவர் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். ஸ்ரீகாந்த் ராம் செட்டிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.

    இதனால் சிகிச்சைக்காக ஆந்திராவில் இருந்து ஸ்ரீகாந்த் ராம் செட்டியும், அவரது மகள் நாக சாய்பிரியாவும் வேலூருக்கு வந்தனர்.

    அப்போது தோட்டப்பாளையத்தில் உள்ள விடுதியில் தங்கி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    இந்த நிலையில் நாக சாய்பிரியா தந்தையிடம் கூறிவிட்டு வெளியே சென்றார். வெகு நேரம் ஆகும் மகள் வர வில்லை. இதனால் ஸ்ரீகாந்த் ராம் செட்டி அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளார். அவர் கிடைக்காததால் இது குறித்து வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    • கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு பகுதியை சேர்ந்த 18 வயது மாணவி, அதே பகுதியில் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர் கடந்த 10-ந் தேதி கல்லூரிக்கு சென்று விட்டு வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடமும், உறவினர்கள் வீடுகளிலும் தேடி உள்ளனர்.

    கல்லூரி மாணவி கிடைக்காததால் இது குறித்து செய்யாறு டவுன் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிச்சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை.
    • மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    தேவதானப்பட்டி, மே.12-

    தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி ஆசாரி தெருவை சேர்ந்த முருகேசன் மகள் ஸ்ரீதேவி(17). இவர் பிளஸ்-2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிச்சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. அக்கம்பக்கம் விசாரித்தும் தகவல் கிடைக்காததால் தேவதானப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    • தோழி வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை
    • போலீசார் வழக்கு செய்து தேடி வருகின்றனர்

    செய்யாறு:

    செய்யாறு பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி ஆரணியில் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

    இவர் தற்போது வெளியான பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளார். மாணவிக்கு பிறந்தநாள் என்பதால் தனது தாயாரிடம் சென்று நான் ஆரணியில் உள்ள தோழி வீட்டிற்கு சென்று வருவதாக கூறினார்.

    இதற்கு தாயார் மறுப்பு தெரிவித்து வயல் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மாணவியின் அண்ணன் பகல் ஒரு மணி அளவில் வீட்டிற்கு வந்துள்ளார்.

    அப்போது தனது தங்கை வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தந்தையிடம் தெரிவித்தார். பின்னர் இது சம்பந்தமாக பெற்றோர் செய்யாறு போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    பிறந்தநாளில் மாணவி மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வீட்டில் தனியாக இருந்த அவரது மூத்த மகள் கல்லூரி மாணவியான ஜெனிஷாவை காணவில்லை
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே சரல் விளை பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். கேரளாவில் கட்டிட வேலை செய்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். சம்பவத்தன்று விஜயாவும் அவரது இளைய மகளும் பொருள்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்ற னர்.

    பொருள்கள் வாங்கி விட்டு வீட்டுக்கு வந்து பார்க்கும்போது வீட்டில் தனியாக இருந்த அவரது மூத்த மகள் கல்லூரி மாணவியான ஜெனிஷாவை (வயது 22) காணவில்லை. பதட்டம் அடைந்த அவர்கள் பல இடங்களில் தேடியும், கண்டுபிடிக்க முடியவில்லை,

    இதுகுறித்து தக்கலை போலீஸ் நிலையத்தில் மாணவியின் தாய் விஜயா புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.போலீசார் நடத்திய விசாரணையில் மாணவி சென்னையில் இருப்பது தெரியவந்தது. மாயமான கல்லூரி மாணவியை தேடி போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.

    • வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
    • அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்துள்ள மொட்றகை பகுதியை சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் கடந்த 2-ந்தேதி அன்று வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    இது குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    • தேர்வு எழுத கல்லூரி செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வரதகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி.

    இவர் சேலம் அரசு கலைக் கல்லூரியில் விலங்கியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் வீட்டில் இருந்து தனியார் பேருந்து மூலமாக கல்லூரிக்கு சென்று வருவார்.

    இந்நிலையில் கடந்த 2-ம் தேதி தேர்வு எழுத கல்லூரி செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள் உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதேபோல் பாலக்கோடு அருகே உள்ள தீர்த்தகிரி நகர் பகுதியை சேர்ந்தவர் கவுதமன். இவரது மகள் கார்குழலி (வயது 24). இவர் பாலக்கோடு பத்திரப்பதிவு அலுவலகத்தில் எழுத்தராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 3-ம் தேதி வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து கவுதமன் கொடுத்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கார்குழலியை தேடி வருகின்றனர்.

    அதேபோல் அரூர் அருகே உள்ள ஏ.கே.தண்டா பகுதியை சேர்ந்தவர் 13 வயது மாணவி. இவர் விடுதியில் தங்கி அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் மொத்தனூர் ரெட்டி பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டில் அங்கு இருந்து வந்தார். அப்போது சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

    இது குறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    • கடந்த 30-ந்தேதி அன்று வீட்டை விட்டு வெளியே சென்றார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள மாதம்பதி பகுதியை சேர்ந்தவர் 17-வயது மாணவி. இவர் கடந்த 30-ந்தேதி அன்று வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர் மத்தூர் போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்தபகுதியில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி நீண்ட நேரமாக செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். இதனை அவரது தந்தை கண்டித்தார். இதில் கோபம் அடைந்த சிறுமி யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதையடுத்து சிறுமி காணாமல் போனதை கண்டு அவரது தந்தை தெரிந்த இடங்களில் எல்லாம் தேடிப்பார்த்தார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிறுமியின் தந்தை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி பின்னர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் போத்தாபுரம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி பள்ளிக்கு சென்றுவருவதாக கூறிவிட்டு வீடடை விட்டு வெளியே சென்ற சிறுமி பின்னர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதுகுறித்து சிறுமியின் தந்தை காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் ஓசூர் அரசனட்டி பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் மாணவி நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் தாய் ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் நிைலயத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடிவருகின்றனர்.

    • நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கோபிகாவை தேடி வருகிறார்கள்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கோட்டார் வடலிவிளை வயல் தெருவை சேர்ந்தவர் கோபிகா (வயது 19).

    இவர் நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கோபிகா கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றார். பின்னர் மாலை அவர் வீடு திரும்பவில்லை.

    இதையடுத்து அவரது பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடினார்கள். எங்கு தேடியும் கோபிகா கிடைக்கவில்லை.

    இதுகுறித்து கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கோபிகாவை தேடி வருகிறார்கள்.

    • சம்பவத்தன்று வெளியே செல்வதாக கூறி வீட்டைவிட்டு சென்றார்
    • ஆனால் அவர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பன்னி அள்ளியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் மாரண்ட அள்ளியில் உள்ள பள்ளியில பிளஸ்-2 பொதுதேர்வை முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வெளியே செல்வதாக கூறி வீட்டைவிட்டு சென்றார். ஆனால் அவர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை.

    இதுகுறித்து சிறுமியின் தந்தை தமிழன் மாரண்டஅள்ளி போலீஸ் நிலையத்தில் அதே பகுதியைச் சேர்ந்த டேவிட் என்பவர் அைழத்து சென்றதாக அவர் மீது சந்தேகத்தின்பேரில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் தீவிரமாக தேடிவருகின்றனர்.

    ×